கஞ்சா போதையில் ரகளை; 19 வாகனங்கள் உடைப்பு: 3 பேருக்கு வலை



சென்னை: கே.கே.நகர், 10வது செக்டரில் உள்ள 60, 61, 63வது தெருவில் அப்பகுதி மக்கள் அவரவர் வீட்டின் முன்பு கார் மற்றும் பைக்களை நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு கஞ்சா போதையில் அங்கு வந்த 3 பேர், அங்குள்ள வாகனங்களை அடித்து உடைத்தனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியே வந்தபோது, கத்தி முனையில் அவர்களை மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.இதில், 3 கார்கள், 6 ஆட்டோ, 10 பைக்குகள் அடித்து உடைக்கப்பட்டன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரிக்கின்றனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குஜராத் அமைச்சரவை இரண்டு நாளில் முடிவு| Dinamalar

Tue Sep 14 , 2021
ஆமதாபாத்:’குஜராத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா அடுத்த இரண்டு நாட்களில் நடைபெறும்’ என, பா.ஜ., தெரிவித்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த பா.ஜ.,வின் விஜய் ரூபானி சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, முதல் முறை எம்.எல்.ஏ.,வான பூபேந்திர படேல் முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றார்.ஆனால், அமைச்சர்கள் யாரும் அவருடன் பதவியேற்க வில்லை. ‘யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்’ என, […]

You May Like

Breaking News

Translate »