குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் மோடி| Dinamalar


புதுடில்லி:இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய ‘குவாட்’ அமைப்பின் தலைவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

வாஷிங்டனில், வரும் 24ம் தேதி நடக்கும் குவாட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இரு தரப்பு உறவுகள்

குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு, கடந்த மார்ச் மாதம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடந்தது. இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்கும் முதல் மாநாடு 24ம் தேதி வாஷிங்டனில் நடக்கிறது.

இது குறித்து நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். குவாட் தலைவர்கள் மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷியிடே சுகாவுடன் அவரும் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளை பாதுகாப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசப்படும். மிக முக்கியமாக, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பேசுவர். முன்னதாக 23ம் தேதி, மோடி இரு தரப்பு உறவுகள் தொடர் பாக ஜோ பைடனுடன் பேச உள்ளார்.

மேலும், ஸ்காட் மோரிசனையும் அவர் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேசுவார். பின், நியூயார்க் செல்லும் மோடி, ஐ. நா., பொது சபையில் 25ம் தேதி பேச உள்ளார்.’ஹவ்டி மோடி’அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், மோடி அவரை முதல் முறையாக நேரில் சந்தித்து பேச உள்ளார். கடைசியாக, கடந்த 2019 செப்.,ல் அமெரிக்காவுக்கு மோடி சென்றார். அப்போது அதிபராக இருந்த டொனால்டு டிரம்புடன், ஹூஸ்டனில் நடந்த, ‘ஹவ்டி மோடி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கடந்த, ஆறு மாதங்களில் பிரதமர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். கடந்த மார்ச் மாதம் நடந்த, அண்டை நாடான வங்கதேசத்தின், 50வது ஆண்டு விடுதலை விழாவில் அவர் பங்கேற்றார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘யோகியால் வந்த வளர்ச்சி’

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அலிகர் மாவட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளரான ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரில், புதிய பல்கலை அமைக்க அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கடந்த 2017க்கு முன் உத்தர பிரதேசத்தை ரவுடிகளும் கொள்ளையர்களும் தான் ஆட்சியை நடத்தி வந்தனர். அதையெல்லாம் மாற்றி, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத். அதேபோல, நலத் திட்டப் பலன்கள் மக்களை சென்றடைய விடாமல் சிலர் தடுத்து வந்தனர். தற்போது திட்டப் பலன்கள் மக்களை நேரடியாக சென்றடைகின்றன.

‘இரட்டை என்ஜின்’ எனப்படும் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி இருப்பதால் இது சாத்தியமானது. யோகி ஆதித்யநாத்தால் உத்தர பிரதேசத்துக்கு வளர்ச்சி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தீக்ஷனா இலங்கையின் முதல் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த கிரிக்கெட் வீரர் - மிரர் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்

Tue Sep 14 , 2021
வலது கை சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்ஷனா, ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில், வருகைதரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானபோது, ​​இலங்கையில் இருந்து 21 வது நூற்றாண்டில் பிறந்த முதல் வீரர் ஆனார். “எனக்கு ஆச்சரியமாக இல்லை. தொப்பியை அவரிடம் ஒப்படைக்க இது சரியான நேரம்” என்று கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப்பில் அவரது வழிகாட்டியும் பயிற்சியாளரும் பிரத்தியேகமாக தொலைபேசியில் பேசினார். “மஹீஷ் உள்நாட்டு சுற்றில் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார், அவருக்கு வெகுமதி […]

You May Like

Breaking News

Translate »