சம்பாதிக்க வேற வழியே தெரியல.. சண்டை போட்ட சேனலிடமே சரண்டர் ஆன ஒல்லி நடிகை! | Lean actress forgot her fight over the popular tv channel


பிரபலமாக்கிய பெரிய ஷோ

பிரபலமாக்கிய பெரிய ஷோ

சினிமா படங்களை விட அந்த ஒல்லி நடிகையை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியதே அந்த பெரிய ரியாலிட்டி ஷோ தான். அந்த வீட்டில் நடிகை போட்ட ஆட்டத்தையும் சிரிப்பையும் பார்த்த ரசிகர்கள் தலைவி ரேஞ்சுக்கு அவரை தலையில் தூக்கி வைத்து ஆடினர்.

மனநல பாதிப்பு

மனநல பாதிப்பு

தொகுப்பாளர் மற்றும் மற்ற பிரபலங்களை விட நடிகைக்கு கூடுதல் மவுசு ரசிகர்கள் மத்தியில் எகிறியதை அறிந்த அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் நடிகைக்கு மனநலம் பாதித்து விட்டதாக கூறி அதிரடியாக அந்த நிகழ்ச்சியில் இருந்து அவரை வெளியேற்றினர்.

டார்ச்சர் கொடுத்தாங்க

டார்ச்சர் கொடுத்தாங்க

அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரே நாம தான்னு நினைச்சிட்டு இருந்தப்போ அந்த நடிகை வெளியேறியது அவரை ரொம்பவே அப்செட் ஆக்கியது. உடனடியாக அந்த சேனல் தனக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் எந்த அளவுக்கு டார்ச்சர் கொடுத்தனர் என்பதை விளாவரியாக பல ட்வீட்களை போட்டி நேரடியாக மோதலில் இறங்கினார்.

ஒரே சண்டை

ஒரே சண்டை

அந்த டிவியின் பித்தலாட்டங்கள் இவை எல்லாம் என்றும் உள்ளே நடக்கும் பல மோசடிகளையும் அம்பலப்படுத்தப் போகிறேன் என்றும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்ட நடிகைக்கும் அந்த சேனலுக்கும் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த நடிகையை எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அழைப்பதை அந்த சேனல் தவிர்த்து வந்தது.

நிலைமை மோசம்

நிலைமை மோசம்

ரசிகர்கள் மத்தியில் கிடைத்த புகழை வைத்துக் கொண்டே சினிமாவில் பெரிதாக சாதித்து விடலாம் என நினைத்த அந்த நடிகை அந்த சேனலை பயங்கரமாக பகைத்துக் கொண்டார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல பெரிய படங்கள் சில கிடைத்தாலும் வெற்றி கிடைக்காமல் நிலைமை ரொம்பவே மோசமானது.

சரண்டர்

சரண்டர்

சர்ச்சைகளுக்கும் சண்டைகளூக்கும் பஞ்சமே இல்லாத அந்த சேனலில் மீண்டும் போய் பேசி பாருங்க.. உங்க நிலைமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வரும் என எந்த ஜோசியக்காரர் சொன்னாருன்னு தெரியல மறுபடியும் அந்த சேனலிடமே அந்த ஒல்லி நடிகை சரண்டர் ஆகி விட்டாராம். பல புதிய ஷோக்களிலும் நடித்து சம்பாதிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விளாடிமிர் புடின் குரான்டினில் | எல்எம்டி

Tue Sep 14 , 2021
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது உள் வட்டத்தில் உள்ள பலர் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்ததைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவதாக கிரெம்ளின் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடின் கொரோனா வைரஸுக்கு எதிர்மறை சோதனை செய்துள்ளதாகவும், அவர் “முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்” என்றும் கூறினார்.பெஸ்ட்கோவ் ஒரு மாநாட்டு அழைப்பில் பத்திரிகையாளர்களிடம் கூறினார், புடினின் பரிவாரங்களில் “பலர்” கோவிட் -19 உடன் நோய்வாய்ப்பட்டதால், ஜனாதிபதி […]

You May Like

Breaking News

Translate »