அந்த பிரச்சனை தான் காரணம்.. எல்லோரும் ஒரே அடியாக என்னை ஒதுக்கிட்டாங்க.. புலம்பலில் ராணி நடிகை! | Sister arrest in drug case totally affects young actress career


பப்ளி நடிகை

பப்ளி நடிகை

நல்லா கொழு கொழுன்னு பப்ளியாக இருக்கும் அந்த ராணி நடிகை கோலிவுட்டில் அடியெடுத்து வைத்ததும் அடுக்கடுக்கான படங்கள் அவருக்கு தொடர்ச்சியாக வந்து குவிந்தன. அவர் நடிக்கும் படங்களும் மினிமம் கியாரண்டி வெற்றி பெற்று வந்ததால் மேலும், பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

அடல்ட் படம்

அடல்ட் படம்

காமெடி படங்களில் ஹீரோயினாக கலக்கி வந்த அந்த நடிகை திடீரென காமெடி கலந்த அடல்ட் படத்தில் வாய்ப்பு கிடைக்க அதற்கும் ஓகே சொல்லி நடிக்க ஆரம்பித்தார். அத்துடன் அவருக்கு தொடர்ச்சியாக வந்த வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின.

அக்கா தான் காரணம்

அக்கா தான் காரணம்

ஆனால், அடல்ட் காமெடி படத்தில் நடித்தது மட்டும் இவரது வாய்ப்பு பறிபோக காரணமாக இருக்க வில்லை. அந்த படத்திற்கு பிறகும் சில நல்ல படங்களில் வித்தியாசமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால், சொந்த அக்காவுக்கு உருவான அந்த பிரச்சனை தான் நடிகைக்கு ஒரே அடியாக பட வாய்ப்புகள் வராமல் போனதற்கு முக்கிய காரணமே என சமீபத்தில் நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி புலம்பி உள்ளாராம்.

அந்த விவகாரத்தில் கைது

அந்த விவகாரத்தில் கைது

நாட்டையே உலுக்கி வரும் போதைப் பொருள் விவகாரத்தில் ராணி நடிகையின் அக்கா நடிகை கைது செய்யப்பட்டது மிகப்பெரிய பரப்பரப்பை கிளப்பியது. சிலர் தங்கைக்கும் அந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கு என கிளப்பி விடவே இவரை கோலிவுட்டில் புக் செய்வதை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தவிர்க்க ஆரம்பித்தனர்.

நடிப்பே வராது

நடிப்பே வராது

அக்கா கைது ஒரு பக்கம் இருந்தாலும், எல்லா படத்திலும் ஒரே மாதிரியாகவே வந்து விட்டது செல்வது தான் இந்த நடிகையின் ரியல் பிரச்சனை என்றும் அதன் காரணமாகவே தான் பலரும் இவரை ஓரங்கட்ட முடிவு செய்து விட்டனர் என்றும் ஆனால், புதிய வாய்ப்புகளை பெற தனது அக்கா மீது பழியை போட்டு நடிகை சமாளித்து சான்ஸ் கேட்டு வருவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் பல கதைகளை கூறி வருகின்றன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லங்கா சி செய்தி | நாடு திவாலாகிவிட்டது .. அரசாங்கத்தால் மீள முடியாது .. ராஜினாமா செய்து தேர்தலை அழைக்கவும் ..

Sun Sep 12 , 2021
செப்டம்பர் 12, 2021 மதியம் 12:00 மணிக்கு | லங்கா சி செய்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடனடியாக மக்கள் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் பட்டினி கிடக்கிறார்கள், இனி அதை தாங்க முடியாது என்றார். ஊடகங்களுக்கு வழங்கிய விசேட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஹம்பாந்தோட்டை தெபரவெவவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், நாட்டில் வரிசைகள் மற்றும் ரேஷன்களின் சகாப்தம் […]

You May Like

Breaking News

Translate »