நம்பர் நடிகைக்கு பாடிகார்டா இருந்து தொழிலையே மறந்துட்டாராம் இயக்குநர்.. என்ன இப்படி ஆகிடுச்சே? | Rowdy director stucks in a big trouble


ரெண்டு இல்ல மூணு

ரெண்டு இல்ல மூணு

ஏற்கனவே இரண்டு காதல்கள் சொதப்பிய நிலையில், மூன்றாவது முறையாக இயக்குநரை காதலித்து வரும் நம்பர் நடிகைக்கு இயக்குநர் நல்லாவே செட் ஆக பல ஆண்டுகளாக இவர்களது காதல் வாழ்க்கை லிவ்விங் டுகெதர் லெவலுக்கு சென்று நிச்சயம் வரையில் முடிந்திருக்கிறது. திருமண பேச்சு மட்டும் இப்போதைக்கு வேண்டாம் என நடிகையின் தரப்பில் இருந்து தள்ளிப் போட பட்டிருக்கிறது.

காதலிக்கு பாடிகார்ட்

காதலிக்கு பாடிகார்ட்

முந்தைய படம் சொதப்பிய நிலையில், அடுத்த படத்தை இயக்கும் வேலையை ஆரம்பிக்காமல் காதலிக்கு பாடிகார்டாக பல இடங்களில் சுற்றித் திரிந்து வந்த இயக்குநர், ஒரு வழியாக காதலியை வைத்தே ஒரு புதிய படத்தையும் இயக்கும் வாய்ப்பும் இயக்குநருக்கு வந்தது.

வெற்றி கூட்டணி

வெற்றி கூட்டணி

புதுசா பெரிய நடிகர்கள் யாரும் வாய்ப்பு தர முன் வராத நிலையில், பழைய வெற்றி கூட்டணியை வைத்தே மீண்டுமொரு காதல் படத்தை இயக்கி ஹிட் கொடுத்து விடலாம் என இயக்குநர் பக்காவாக ஐடியா போட்டு அந்த கூட்டணியில் இன்னொரு முன்னணி நடிகையையும் சேர்த்து படம் ஆரம்பிக்கும் முன்பே படத்தை பற்றி பேச வைக்க வேண்டிய வேலைகளை பார்த்து விட்டார்.

லொகேஷனும் மாறல

லொகேஷனும் மாறல

ஏற்கனவே தனக்கு ஹிட் கொடுத்த அந்த படம் எங்கே எடுக்கப்பட்டதோ அதே இடத்திலேயே மீண்டும் அதே நடிகர்களை வைத்து படத்தை உருவாக்கி வருகிறார் அந்த இயக்குநர். ஆனால், இப்போ அவருக்கும் படத்திற்கும் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் பேச ஆரம்பித்துள்ளன.

தொழிலை மறந்துட்டாரு

தொழிலை மறந்துட்டாரு

வேறு ஏதாவது பிரச்சனை என்றாலும் சுமூக பேச்சுவார்த்தைகள் மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், முதலுக்கே மோசம் என்பது போல தொழிலையே மறந்துட்டாராம் அந்த பிரபல இயக்குநர். சிங்கிள் டேக்கில் நடித்து தள்ளும் நடிகர்களை வைத்துக் கொண்டு பல முறை காட்சிகளை மாற்றியும் எடுத்த காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுத்தும் காசை கரியாக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவசரப்படுத்தும் காதலி

அவசரப்படுத்தும் காதலி

சீக்கிரமா படத்தை எப்படியோ எடுத்து முடி எனக்கு அடுத்தடுத்து பல பெரிய படங்கள் காத்திருக்கின்றன என காதலி நடிகையும் அவசரப்படுத்தி வருவதால், பிளான் பண்ண மாதிரி படம் எடுக்க முடியாமல் ஏகப்பட்ட பழைய சீன்களை சுட்டு, வெட்டி, ஒட்டி வருகிறாராம். இந்த படமும் போன படம் போல ஃபிளாப் ஆனால் அடுத்து இவரை நம்பி யாரும் நடிக்க வரமாட்டார்கள் என்றே சினிமா வட்டாரங்கள் ஒரே போடாக போட்டுள்ளன. கைவசம் வேறு தொழிலும் இருப்பதால் இது போனாலும் பரவாயில்லை என்கிற யோசனையுடன் இருக்கிறாரோ என்னவோ இயக்குநர் தெரியவில்லை.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மைக்ரோசாஃப்ட் அபாண்டன்ஸ் அமெரிக்க அலுவலகங்களை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது.

Sat Sep 11 , 2021
டெல்டா மாறுபாடு குறித்த கவலைகள் காரணமாக அடுத்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அலுவலகங்களை முழுமையாகத் திறப்பதற்கான திட்டங்களை ரத்து செய்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது Source link

You May Like

Breaking News

Translate »