150 ரூபாய் கூட இல்லாமல் ஆட்டோக்காரரை ஏமாற்றிய ஒல்லி நடிகை.. என்ன நிலைமை இப்படி ஆகிடுச்சே? | Reality show fame actress cheating auto driver for not paying for her ride


கேரளத்து இறக்குமதி

கேரளத்து இறக்குமதி

கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல நடிகைகள் கோலிவுட்டில் கோலோச்சி இருக்கும் நிலையில், இந்த ஒல்லி நடிகைக்கு மட்டும் ஏன் அதிர்ஷ்டம் கொஞ்சம் கூட பக்கம் வர மாட்டேன் என்கிறதே என அவருக்கு நெருக்கமானவர்கள் புலம்பி வருகின்றனர்.

தலைவி அந்தஸ்து

தலைவி அந்தஸ்து

டிஆர்பியை எகிற வைக்கும் அந்த ரியாலிட்டி ஷோவின் ஆரம்பத்திலேயே கலந்து கொண்டு தனக்கான தனிக்கூட்டத்தை உருவாக்கிய ஒல்லி நடிகையால் சினிமாவில் சிறப்பாக நடிக்க முடியாமல் கிடைத்த ரசிகர் பட்டாளத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து தவித்து வருகிறார்.

மார்க்கெட் காலி

மார்க்கெட் காலி

ஒரு சில படங்கள் இவரை வைத்து எடுத்தாலும் படம் ஓடாமல் ஆரம்பித்த இடத்திலேயே உடைந்து விழுவதால் ஒல்லி நடிகையா வேண்டவே வேண்டாம் சாமி என தயாரிப்பாளர்கள் பெரிய கும்பிடாக போட்டு ஓட்டம் எடுத்து வருகின்றனர். நெருங்கிய ஹீரோ நண்பர்களும் உதவி செய்ய முடியாத நிலையில், அடுத்த படத்தில் பார்க்கலாம் என ஆறுதல் சொல்லி அப்ஸ்காண்ட் ஆகி விடுகின்றனர்.

பெட்ரோலுக்கும் வழியில்லை

பெட்ரோலுக்கும் வழியில்லை

நடிகையிடம் கார் இருக்கும் நிலையில், பெட்ரோல் விலை உயர்வால் இப்போதெல்லாம் வருகிற சின்ன சின்ன வாய்ப்புகளுக்கு காரை எடுக்காமல் ஒலா ஆட்டோவை புக் செய்து விட்டுத் தான் சென்று வருகிறாராம். அப்படி சமீபத்தில் நடிகை சென்ற போது நடந்த மேட்டர் மிகப்பெரிய சம்பவமாகவே மாறி உள்ளது.

ஆட்டோக்காரரை ஏமாற்றி

ஆட்டோக்காரரை ஏமாற்றி

சமீபத்தில் ஏதோ புதிய பட சான்ஸ் கேட்டு ஒரு தயாரிப்பு ஆபிஸுக்கு ஒல்லி நடிகை ஆட்டோவில் ஏறி செல்ல நடிகையை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் என்ன மேடம் நீங்க ஆட்டோலையான்னு கேட்டு ரொம்பவே ஹேப்பியா ஆட்டோவில் அவரை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், கடைசியில் ஆட்டோக்காரருக்கு நடிகை பணமே தராதது தான் பஞ்சாயத்து ஆகி இருக்கிறது.

150 ரூபா கூட இல்லை

150 ரூபா கூட இல்லை

காருக்குத்தான் பெட்ரோல் போட முடியாத நிலை இருப்பதால் ஆட்டோ சவாரி செய்த நடிகையிடம் அவசரமாக பர்ஸில் 150 ரூபா கூட இல்லாததால், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உடனே வந்திடுறேன்னு சினிமா ஆபிஸுக்குள்ள போனவரு திரும்பியே வரலையாம்.

கடுப்பான ஆட்டோக்காரர்

கடுப்பான ஆட்டோக்காரர்

இவ்ளோ பெரிய நடிகையா இருந்துட்டு இப்படி ஏமாத்திட்டாங்களே என ஆட்டோக்காரர் ரொம்பவே கடுப்பாகி போயுள்ளராம். அவர் வழக்கமாக டீ அருந்தும் கடைகளில் மற்றும் மற்ற ஆட்டோ ஓட்டுநர்களிடம் எல்லாம் இந்த சம்பவத்தை சொல்லி புலம்பி வருகிறாராம். பாவம் ஒரு காலத்துல நல்லா இருந்த நடிகையின் நிலைமை இப்போ இப்படி ஆகிடுச்சேன்னும் ஏடிஎம் ஏதும் வேலை செய்திருக்காது அவசரத்தில் பர்ஸில் காசு இருந்திருக்காது அதனால் தான் கொடுத்திருக்க மாட்டார். மறுபடியும் சந்தித்தால் கொடுத்து விடுவார் விடு என நண்பர்கள் அந்த ஆட்டோக்காரருக்கு ஆறுதல் சொல்லி ஒரு டீ வாங்கி கொடுத்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

FCR - லங்கா பிசினஸ் ஆன்லைன்

Fri Sep 10 , 2021
ஐஎம்எஃப் திட்டத்திற்கு செல்ல இலங்கை பரிசீலிக்கும் அதிக நிகழ்தகவு இருப்பதாக தெரிகிறது என்று முதல் மூலதன ஆராய்ச்சி நம்புகிறது. பேச்சுவார்த்தைகள் பற்றிய வதந்திகள் இருந்தபோதிலும், இதுவரை அத்தகைய திட்டம் செயல்படுத்தப்படவில்லை, ஆனால் அரசாங்கம் IMF இலிருந்து USD 787Mn விரைவான நிதி வசதியைப் பெற்றுள்ளது. “பொருளாதார குறிகாட்டிகள் மற்றும் முன்னறிவிப்புகளை ஆராய்ந்து, இலங்கை ஒரு ஐஎம்எஃப் திட்டத்திற்கு விரைவில் செல்ல 85% நிகழ்தகவு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்” என்று முதல் […]

You May Like

Breaking News

Translate »