ஹாலிவுட்டுக்கே அடிபோடும் சமத்து நடிகை.. எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல ரெடியாம்! | South Indian actress has some Hollywood plans in her bucket list


தேங்கி விடக் கூடாது

தேங்கி விடக் கூடாது

சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட சமத்து நடிகை அதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக களமிறங்கி கலக்கி வந்தார். ஆனால், ஒரே இடத்தில் தனது திறமை தேங்கி விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.

தலைக்கு ஏறிய புகழ்

தலைக்கு ஏறிய புகழ்

சமீபத்தில் சமத்து நடிகை நடிப்பில் வெளியான வெப் தொடர் அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரது பார்வை அந்த நடிகையின் மீது பட்டுள்ளதால் விரைவில் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடக் காத்திருக்கிறார். தலைக்கு மேல் ஏறிய புகழ் காரணமாக ஏத்தி விட்ட ஏணிகளை தள்ளி விடவும் தயாராகி விட்டார் அந்த நடிகை என்கிற புலம்பல்களும் பெருகி வருகின்றன.

ஹாலிவுட் பிளான்

ஹாலிவுட் பிளான்

தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டிற்கு சென்று சாதிக்கவே ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள நிலையில், அதனையும் தாண்டி ஹாலிவுட் வரை செல்ல சமத்து நடிகை திட்டமிட்டு இருப்பது இந்த விஷயம் தெரிந்த சிலருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தென்னிந்தியர்கள் மீது

தென்னிந்தியர்கள் மீது

ஹாலிவுட் பிரபலங்களின் அடுத்த டார்கெட் அதிகளவில் தென்னிந்திய நடிகர்கள் பக்கம் சாய்ந்து வருவதால், அவுட் ஆஃப் தி பாக்ஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்வு செய்து புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார்கள். இதையறிந்த சமத்து நடிகை எப்படியாவது அந்த வாய்ப்பை எட்டி பிடித்து விடவேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.

எப்படி வேண்டுமானாலும் நடிக்க ரெடி

எப்படி வேண்டுமானாலும் நடிக்க ரெடி

ஹாலிவுட்டுக்கு செல்ல வேண்டுமானால் நடிகைகள் சில பல தியாகங்களை செய்ய வேண்டி இருக்குமே என நண்பர்கள் வட்டாரத்தில் கேட்க, நல்ல நடிப்புக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானால் செல்ல தடையே இல்லை என்றும் தனக்கு பிடித்ததை செய்ய யாரும் தன்னை தடுக்கவும் முடியாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளாராம்.

அதற்கான முயற்சிகள்

அதற்கான முயற்சிகள்

அந்த சர்ச்சைக்குரிய வெப் தொடரை பார்த்து ஹாலிவுட்டில் இருந்தும் சில வாய்ப்புகள் கதவை தட்ட அதற்கான முயற்சிகள் மற்றும் பயிற்சிகளில் அம்மணி தீவிரம் காட்டி வருகிறாராம். வெளிநாட்டு நண்பர்கள் சிலர் புதிதாக அறிமுகமாகி உள்ளது தான் இந்த திடீர் மாற்றத்திற்கு முழுக்க முழுக்க காரணம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Undercover – S01 (2021) Tamil Dubbed Series HD 720p Watch Online

Wed Sep 8 , 2021
Maayavan (2017) HD 720p Tamil Movie Watch OnlineDhilluku Dhuddu 2 (2019) Tamil Movie HDRip 720p Watch OnlineMathil Mel Poonai (2013) DVDRip Tamil Movie Watch OnlineMad Max 2: The Road Warrior (1981) Tamil Dubbed Movie HD 720p Watch OnlineKaruthukalai Pathivu Sei (2019) HD 720p Tamil Movie Watch Online Source Source link

You May Like

Breaking News

Translate »