இயக்குநர் புகார்: தணிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள் | one by two movie censor rejected by officials


இயக்குநர் விஜய் ஸ்ரீ புகாரால், தெலுங்குப் படத்தின் தணிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு சாருஹாசன், ஜனகராஜ், பாலா சிங், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘தாதா 87’. இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ உடன் இணைந்து கலை சினிமாஸ் நிறுவனமும் தயாரித்திருந்தது.

கலை சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து தெலுங்கு உரிமையை வாங்கி ‘ஒன் பை டூ’ படத்தை உருவாக்கியுள்ளார்கள். இதில் சாருஹாசன் கதாபாத்திரத்தில் சாய்குமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியானபோது, அதைப் பார்த்துக் கடும் அதிர்ச்சியடைந்தார் விஜய் ஸ்ரீ. உடனடியாக இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இது தொடர்பாக என்ன நடந்தது என்பதை விளக்கி, தணிக்கை அதிகாரிகளுக்குக் கடிதமொன்றை எழுதினார் விஜய் ஸ்ரீ. அதில் ‘ஒன் பை டூ’ படத்தைத் தன்னிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் வாங்கும் வரை தணிக்கை செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

சமீபத்தில் ‘ஒன் பை டூ’ படத்தைத் தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு. விஜய் ஸ்ரீ எழுதியுள்ள கடிதத்தை முன்வைத்து, படத்தின் தணிக்கைக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீயிடம் ‘ஒன் பை டூ’ படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

‘ஒன் பை டூ’ படத்துக்குத் தணிக்கை மறுக்கப்பட்டதற்குத் தணிக்கை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய் ஸ்ரீ. இது தொடர்பாகத் தணிக்கை அதிகாரிகளுக்கு நன்றிக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

‘தாதா 87’ படத்தைத் தொடர்ந்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ‘பப்ஜி’ மற்றும் ‘பவுடர்’ ஆகிய படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதுச்சேரி: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கார் டிரைவர் போக்சோவில் கைது

Mon Sep 6 , 2021
புதுச்சேரியில் 14 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியதாக கார் டிரைவரை போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் […]

You May Like

Breaking News

Translate »