இந்த ஆண்டின் சிறந்த சப்போர்ட்டாக இது தான் இருக்க முடியும்| Dinamalar


முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல், மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு, சாதனைகளை படைக்கிறார். இதன் வாயிலாக, தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. கடந்த காலத்தில் தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகம், நிமிர்ந்த நன்னடை போடுகிறது.
– தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

‘இந்த ஆண்டின் சிறந்த ‘ஜிங் சாங்’ ஆக இது தான் இருக்க முடியும்; இதை எழுதும் போது உங்களுக்கு கண்டிப்பாக சிரிப்பு வந்திருக்கும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை.

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம், அகவிலைப்படியை வழங்க வேண்டும். நிதி அமைச்சரின் பல கருத்துகள் ஏற்கக் கூடியதாக இல்லை. முதல்வர், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
– மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்

‘தமிழக நிதியமைச்சரை ஆகா, ஓகோ என புகழ்ந்தீர்கள். இப்போது, சரியில்லை என்கிறீர்கள்… கொள்கையை மாற்றி விட்டீர்களா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி.

கருத்துக்கணிப்பு ஒன்றில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் ஆகிறது என, 93 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யார் ஆட்சி செய்தாலும், லஞ்சம் இருக்கிறது; லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் ஆகும் என்பதையும் மக்கள் உணர்ந்தே உள்ளனர்.
– மக்கள் நீதி மய்ய செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ்

‘இந்த நிலையில், நீங்கள் ஆட்சிக்கு வந்தால், எல்லாவற்றையும் சரி செய்து விடுவோம் என்பீர்களே… ஒருபோதும் உங்களால் முடியாது…’ என, கூறத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்ய செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் அறிக்கை.

கொரோனா பாதிப்பு குறைவால் பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது என்றும், கொரோனா தொற்று அதிகரிப்பால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை என்றும் சொல்லும், தி.மு.க., அரசின் மாறுபட்ட கருத்துக்கள், மாறாத கொள்கை.
– அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்

latest tamil news

‘பக்கத்து மாநிலமான புதுச்சேரியில், விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்தாவது, தமிழக அரசு திருந்த வேண்டும்…’ என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அறிக்கை.

வன்னிய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில், பலியான 21 தியாகிகளுக்கு 4 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீதமுள்ள நான்கு பேரையும் சேர்த்து, 25 தியாகிகளுக்கும் சேர்த்து மணி மண்டபம் கட்ட வேண்டும்.
– வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி

‘ஏன், போராட்டத்தில் ஈடுபட்ட, சிறை சென்ற அனைவருக்கும் மணி மண்டபம் கட்ட வேண்டும்; மாதந்தோறும், தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கேளுங்களேன்…’ என, கூறத் தோன்றும் வகையில், வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி அறிக்கை.

ஜம்மு – காஷ்மீர் பற்றி பேச தலிபான்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. முஸ்லிம் சமுதாயத்தின் செய்தித் தொடர்பாளர்கள் அல்ல அவர்கள். அவர்களின் பேச்சு, சிறுத்தை தன் புள்ளிகளை எப்போதும் மாற்ற இயலாது என்பதை காட்டுகிறது.
– பா.ஜ., முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

‘உண்மை தான். ஆனால், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதிகள் போல அல்லவா தலிபான் பயங்கரவாதிகள் பேசுகின்றனர்…’ என, பீதியுடன் சொல்லத் தோன்றும் வகையில், திரிணமுல் காங்கிரசில் சேர்ந்துள்ள பா.ஜ., முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கை.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தலைவி படத்திற்கு 5 தேசிய விருதுகள் கன்ஃபார்ம்... அடித்துச் சொல்லும் தயாரிப்பாளர் | Producer hoped that thalaivi will earn alteast 5 national awards

Mon Sep 6 , 2021
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட உள்ள தலைவி படத்தின் ரிலீசை முன்னிட்டு கங்கனா, சென்னையில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு 2 நாட்களுக்கு முன் சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதிலும் ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிய கங்கனாவின் ஃபோட்டோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகின. இவர் தான் ஐடியா கொடுத்தது இந்நிலையில் ப்ரீ ரிலீஸ் விழாவில் பேசிய தயாரிப்பாளர் விஷ்ணு […]

You May Like

Breaking News

Translate »