எச்சரிக்கை!| Dinamalar


தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விரைவில் காங்கிரசில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரசாந்த் கிஷோரிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி ராகுலிடம் கூறியுள்ளார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி. ‘மம்தா பானர்ஜியின் ஏஜென்ட் பிரசாந்த் கிஷோர். மறைமுகமாக மோடிக்கும் உதவி வருகிறார்’ என, ராகுல் மற்றும் சோனியாவிடம் யெச்சூரி கூறியுள்ளார். யெச்சூரி தமிழில் பேசக்கூடியவர். தமிழக முதல்வர் ஸ்டாலினிடமும், ‘கிஷோரை நம்பாதீர்கள்’ என அறிவுறுத்திஉள்ளார்.

மூன்று துணை பிரதமர்கள்

வரும் 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் எப்படியாவது மோடியை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசித்து வருகின்றன.

சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக பல விஷயங்கள் அலசப்பட்டன. பா.ஜ.,வுக்கு எதிராக போராட்டங்களை வலுப்படுத்துவது, தினமும் மோடியை வசை பாடுவது என பல ‘ஐடியா’க்களை கொடுத்துள்ளார் ராகுல். இதை தவிர இன்னொரு முக்கிய விஷயத்தையும் ராகுல் சொன்னதாக டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

‘எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால் மூன்று துணை பிரதமர்கள் நியமிக்கப்பட வேண்டும். ‘தமிழக முதல்வர் ஸ்டாலின், பீஹாரின் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் உ.பி.,யில் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்த பதவிக்கு தகுதியானவர்கள்’ என ராகுல் கூறிஉள்ளார்.

பாராட்டு மழை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் தலைமைப் பொறுப்பேற்ற பின் பல அதிரடி விஷயங்களை செய்து வருகிறார். மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடமைகளை செய்யாத போது கண்டித்தும், ஒழுங்காக செய்தால் பாராட்டியும் வருகிறார். தலைமை நீதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவில் குடியேறும் முன் திருப்பதி பண்டிதர்களை வைத்து யாகம் செய்தார். ஏழுமலையான் மீது அதீத பக்தி உடையவர்.புதிய பங்களாவில் தன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.

உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிபவர்களை தன் பங்களாவிற்கு அழைத்து விருந்தும் கொடுத்தார். தோசை உள்ளிட்ட நம் ஊர் உணவுகள் தான் இந்த விருந்தில் பரிமாறப்பட்டன. ரமணாவின் அன்பால் அனைவரும் நெகிழ்ந்து போயினர்.’இதுவரை எந்த ஒரு தலைமை நீதிபதியும் எங்களை மதித்து வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்ததே இல்லை’ என்கின்றனர் உச்ச நீதிமன்ற பணியாளர்கள். ‘நான் ஒரு விவசாயின் மகன். சாதாரண நிலையிலிருந்து இந்த பதவிக்கு வந்தேன். எனவே அனைவரது கஷ்டமும் எனக்கு தெரியும்’ என்கிறார் தலைமை நீதிபதி.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லங்கா சி செய்தி | இயங்க எரிபொருள் இல்லை .. பல மாநகர சபை வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Sun Sep 5 , 2021
செப்டம்பர் 5, 2021 மாலை 6:20 மணிக்கு | லங்கா சி செய்தி பெருவளை மாநகர சபை கூறுகையில், எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று மாலை 5 மணி முதல் மாநகர சபை வளாகத்திற்கு முன்னால் உள்ள காலி சாலையில் டிராக்டர்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளில் பயன்படுத்தப்படும் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் சுகாதார பணியாளர்கள் மற்றும் டிரைவர்கள் உட்பட சுமார் 30 ஊழியர்கள் […]

You May Like

Breaking News

Translate »