சர்ச்சையை கிளப்பும் புத்தகம்| Dinamalar


காங்., மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தற்போது புத்தகம் எழுதுகிறார். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் இந்த புத்தகம் வெளிவர உள்ளது. அதில் காங்கிரசுக்கு பிரச்னையை ஏற்படுத்திய பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.காங்கிரசின் தமிழக மேற்பார்வையாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய குலாம்நபி ஆசாத், தன் புத்தகத்தில் தமிழக அரசியல் குறித்து பல விவரங்களை எழுதி யுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2004ல் கூட்டணி கட்சிகளுடன் காங்., மத்தியில் ஆட்சி அமைத்து மன்மோகன் சிங் பிரதமரானார். தி.மு.க., வின் பாலு உட்பட பலர் மத்திய அமைச்சராகினர்.ஆனால் ஆதரவு தருவதற்கு தி.மு.க., பல நிபந்தனைகளை விதித்தது. டில்லி வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி தங்கள் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் வேண்டும் என கறாராக இருந்தார். அப்போது நடந்த பல விஷயங்களை இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் குலாம்நபி. தமிழகத்தில் இது பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என்கின்றனர் காங்கிரசார்.

பா.ஜ.,வில் சேருவதற்கு முன் இப்படி புத்தகம் எழுதி காங்கிரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறாரா என்றும் காங்கிரசார் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், ‘நிச்சயம் நான் பா.ஜ., வில் சேர மாட்டேன்’ என, உறுதியாக சொல்கிறார் குலாம்நபி ஆசாத்.

நெருங்கும் சபாநாயகர்

சமீபத்தில் தி.மு.க., லோக்சபா எம்.பி.,க்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனியாக அழைத்து பேசியுள்ளார் சபாநாயகர் ஓம் பிர்லா. இவர் சமீபத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சென்று வந்தார். இதையடுத்து எம்.பி.,க்களை சந்தித்து ‘அனைவரும் காஷ்மீர் சென்று வாருங்கள்’ என கூறி வருகிறார்.தி.மு.க., – எம்.பி.,க் களிடம் பேசியபோது, ‘உங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீர் மற்றும் லடாக் சென்று வாருங்கள். அனைத்து ஏற்பாடுகளையும் லோக்சபா செயலகம் செய்து தரும்’ என கூறியுள்ளார் ஓம்பிர்லா. ‘எதற்கு இவர் தி.மு.க., – எம்.பி.,க்களிடம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்’ என, டில்லி அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.

அதிருப்தியில் திருமாவளவன்?

சமீபகாலமாக விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டில்லியில் அடிக்கடி காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து பேசி வருகிறார். இவர்கள் என்ன பேசுகின்றனர் என்பது யாருக்குமே தெரியாத ரகசியம்.பா.ம.க.,வினர் தமிழக முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி பேசி வருவது தி.மு.க., கூட்டணியில் பிரச்னையைக் கிளப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சேரவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்; இது திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை. காங்., மக்கள் நீதி மய்யம், வி.சி.க., கூட்டணி தேவை என தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பிருந்தே ராகுலிடம் சொல்லி வந்தவர் திருமாவளவன். இப்போது பா.ம.க., நிலையைப் பார்த்த பின், தன் பழைய நிலையை ராகுலிடம் அவர் கூறி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.,வின் தமிழக திட்டம்

சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்த பின், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த பா.ஜ., தலைமை முடிவு செய்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார்; முருகன் அமைச்சரானார்.அடுத்ததாக தமிழக அரசியலில் பா.ஜ., எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. அதில் நட்டா, அமித் ஷா ஆகியோருடன் பிரதமரும் பங்கேற்றார். ‘அடுத்த லோக்சபா தேர்தலில் தமிழகத்திலிருந்து பா.ஜ., சார்பில் ஐந்து எம்.பி.,க்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ப தமிழக பா.ஜ., செயல்பட வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தமிழக அரசியலில் சில அதிரடி நடவடிக்கைகள் துவங்கும் என, பா.ஜ., தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுகாதார சட்டங்களை மீறி யாழ்ப்பாணத்தில் நடந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

Sun Sep 5 , 2021
யாழ்ப்பாணம் அச்சுவேலி நவட்காடு பகுதியில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 600 க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரச் சட்டங்களை மீறி கலைக்க பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். உடலை கல்லறைக்கு எடுத்துச் சென்றபோது பெரும் கூட்டம் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. Source link

You May Like

Breaking News

Translate »