கடனில் தத்தளிக்கும் நடிகர்.. மீண்டும் அந்த ஒல்லி நடிகையிடம் உதவி கேட்டிருக்காராம்! | Popular Actor wish to pair with his previous successful movie heroine


போராடி வந்தவர்

போராடி வந்தவர்

சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் பணம் படைத்தவர்களை தவிர மற்றவர்கள் ஹீரோவாக வேண்டும் என்றால் பல போராட்டங்களை சந்தித்தால் தான் அந்த இடத்திற்கு வர முடியும். ஏகப்பட்ட படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக பிரெண்ட் கேரக்டரில் எல்லாம் நடித்து கடும் போராட்டத்திற்கு பிறகு ஹீரோவாக மாறினார் அந்த மூன்றெழுத்து நடிகர்.

வரிசையாக ஹிட்

வரிசையாக ஹிட்

யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கொள்ளைக் கொண்ட அந்த மூன்றெழுத்து நடிகர் ஹீரோவான பின்னர் வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். மேலும், நல்ல இயக்குநர்களுடன் கைகோர்த்து நல்ல கதைகளில் நடித்து விருதுகளையும் குவித்தார்.

ஒல்லி நடிகை அறிமுகம்

ஒல்லி நடிகை அறிமுகம்

கேரளத்தில் ஸ்கூலுக்கு செல்லும் மாணவிகளை எல்லாம் அழைத்து வந்து ஹீரோயின் ஆக்குவது காலம் காலமாக நடந்து வருகிறது. அப்படி இவர் படத்தில் நடிக்க வரவழைக்கப்பட்ட அந்த ஒல்லி நடிகை இவருடன் நடித்த முதல் படமே ஓஹோன்னு ஹிட் அடிக்க அவரது மார்க்கெட்டும் மெல்ல மெல்ல உயர்ந்தது.

அந்த வீடு

அந்த வீடு

மேலும், அந்த ரியாலிட்டி ஷோ வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்த அந்த ஒல்லி நடிகையை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்தனர். படங்கள் ஓடாத நிலையில், மீண்டும் அந்த மூன்றெழுத்து நடிகர் நடிகையின் லேட்டஸ்ட் புகழை பயன்படுத்த நினைத்து இணைந்து நடித்தார்.

லேட் ரிலீஸ்

லேட் ரிலீஸ்

ஆனால், ஏகப்பட்ட கடன் பிரச்சனையில் மாட்டி தவிக்க அந்த படம் வெளியாவதில் மிகப்பெரிய ரிலீஸ் தாமதம் ஆனது. லேட் ரிலீஸ் மற்றும் திரைக்கதை சொதப்பல் போன்ற பல விஷயங்கள் காரணமாக மீண்டும் இவர்கள் இணைந்த படம் இருவருக்குமே எண்ட் கார்டு போடும் அளவுக்கு மாறிவிட்டது.

வேறு வழியில்லை

வேறு வழியில்லை

இந்நிலையில், மறுபடியும் அந்த ஒல்லி நடிகையை சந்தித்து அந்த மூன்றெழுத்து நடிகர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும், புது இயக்குநர் படத்தின் கதை நல்லா இருக்கு, நாம் இருவரும் இணைந்து நடித்தால் மறுபடியும் ஒரு ஹிட் கொடுக்க முடியும்.. அது நிச்சயம் இருவருக்கும் பயன் தரும் என்றும் கன்வின்ஸ் பண்ணியிருக்கிறாராம்.

நடிகை சம்மதிப்பாரா

நடிகை சம்மதிப்பாரா

ஒல்லி நடிகைக்கும் பெரிதாக படங்கள் ஏதும் இல்லாமல் மார்க்கெட் அதள பாதாளத்தில் இருப்பதால், மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை வேண்டாம் என ஒதுக்கி தள்ள மாட்டார் என்றே தெரிகிறது. நடிகருக்கு ஓகே சொல்லி இவர்கள் மீண்டும் இணைந்து நடித்தாலும், கதை நல்லா இருந்தால் தான் ஓடும் என்பது மட்டும் நிச்சயம்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கம்பஹா தாவரவியல் பூங்காவில் பூக்கும் ராட்சத மல்லிகைகள்

Sun Sep 5 , 2021
ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் பூக்கும் ராட்சத ஆர்க்கிட்களை இந்த நாட்களில் கம்பஹா தாவரவியல் பூங்காவில் காணலாம். ராட்சத ஆர்க்கிட் பேராதனை மற்றும் கம்பஹா தாவரவியல் பூங்காக்களில் மட்டுமே காணப்படுகிறது. ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் என்பது இங்குள்ள சிறப்பு. செடியின் சிட்டிகை சுமார் 3 அடி நீளம் கொண்டது. இது பூக்கும் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. Source link

You May Like

Breaking News

Translate »