ஒவ்வொரு நொடியும் மக்களை வாழ வைக்க உதவுவோம் – சஜித் பிரேமதாச


ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பாரம்பரிய எதிர்க்கட்சி அல்ல என்றும், மாறாக ஒவ்வொரு நொடியும் மக்களை வாழ வைக்க உதவும் ஒரு எதிர்க்கட்சியாகும் என்றும்  எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொரோனாவால் போராடும் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு மற்ற அனைத்து நடவடிக்கைகளை விடவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அதற்காக சாத்தியமான அனைத்தையும் தனது கட்சி மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய மருத்துவமனை உபகரணங்கள் வழங்கி வைக்கும் “எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்ப்படுவதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை காலை அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ”எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக முப்பது இலட்சத்து முப்பது ஆயிரம் பெறுமதியான அத்தியவசிய வைத்தியசாலை உபகரணங்கள் திருகோணமலை கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் இரண்டு இலட்சத்து எழுபத்தையாயிரம் (ரூபா.275,000)  பெறுமதி வாய்ந்த Multiple Monitors உபகரணங்கள் இரண்டும் ,பன்னிடரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் (ரூபா.1,240,000) பெறுமதியான Optiflow Nasal Therapy உபகரணங்கள் இரண்டும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டதோடு இதனை கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் ஐ.எம்.ஜவாஹிர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கை 18-30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்குகிறது

Thu Sep 2 , 2021
இலங்கை இன்று 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கத் தொடங்கியது என்று சுகாதார அமைச்சர் கூறினார். இன்று முதல் மாவட்ட அளவில் கோவிட் -19 தடுப்பூசி மூலம் 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். Source link

You May Like

Breaking News

Translate »