காசு தான் முக்கியம்.. கதை பற்றி கவலை இல்லை.. என்ன வெரைட்டி நடிகர் இப்படி இறங்கிட்டாரே? | Talented actor do not care about the full movie script for this reason only


அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்

அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து களமிறங்கிய அந்த வெரைட்டி நடிகருக்கு ஆரம்பத்தில் வெறும் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் ரோல்கள் தான் கிடைத்தன. படிப்படியாக நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டு தொடர்ந்து விடா முயற்சி செய்த அவருக்கு தற்போது வேற லெவல் வரவேற்பு பெருகி உள்ளது.

கேஷுவல் நடிப்பு

கேஷுவல் நடிப்பு

பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளாமல் ஓவர் நடிப்பைக் கொட்டுகிறேன் என ஓவர் ஆக்டிங் பண்ணாமல் கேஷுவலாக நடித்து வருவதால் தான் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தனக்கு வரும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளும் அவர் அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட்களை தடையின்றி ஒதுக்கி ஓடோடி உழைத்து வருகிறார்.

வந்ததும் தெரியல போனதும் தெரியல

வந்ததும் தெரியல போனதும் தெரியல

மற்ற டாப் ஹீரோக்கள் போல அல்லாமல், எதற்கும் காத்திருக்காமல் இஷ்டத்துக்கு படங்களில் நடித்து தள்ளி வருவதால், சில படங்கள் வந்ததும் தெரியல போனதும் தெரியல என்கிற ரீதியில் படு தோல்வி படங்களாக மாறி விடுகின்றன. அதற்கான காரணம் தான் தற்போது திடுக்கிடும் தகவலாக கசிந்திருக்கிறது.

கதை கேட்பதில்லை

கதை கேட்பதில்லை

ஸ்பாட்டுக்கு வந்து சொல்ற சீனை தனக்கு தோன்றும் விதமாக நடித்துக் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறாராம் அந்த வெரைட்டி நடிகர். முழுக் கதையை கேட்காமல் படம் ஓடுமா? ஓடாதா என்பதை பார்க்காமல் அட்வான்ஸ் கிடைத்து விட்டால் போதும் என நடித்துக் கொடுத்து வருவதால் தான் இந்த பிரச்சனை என்கின்றனர்.

இமேஜ் முக்கியமல்ல

இமேஜ் முக்கியமல்ல

ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் அந்த வெரைட்டி நடிகர் அடம்பிடிப்பது இல்லை. அதே போல நல்லவனாக நடிக்க வேண்டும், ராமனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பார்ப்பதில்லையாம். ஏனென்றால் இங்கே எப்படி இமேஜை பாதுகாத்து வளர்த்தாலும் ஒரு நாள் ஒரு சின்ன மேட்டரில் அதள பாதாளத்திற்கு கொண்டு வந்து விட்டு விடுவார்கள் இங்கே நல்லவனாக இருப்பதை விட வல்லவனாகத் தான் இருக்க வேண்டும் என தத்துவங்களையும் அடுக்கி வருகிறாராம்.

தப்பித்து விடுவேன்

தப்பித்து விடுவேன்

ஒரு சில படங்கள் ஓடவில்லை என்றாலும், ஒரு சில படங்களில் பெயர் எடுத்து விட்டாலே போதும் இந்த இண்டஸ்ட்ரியில் தப்பித்து விடலாம் என்றும் கொஞ்சமும் பயம் இல்லாமல் நடித்து வருகிறாராம் அந்த வெரைட்டி நடிகர். மார்க்கெட் இருக்கும் வரைக்கும் தான் நமக்கான மவுசு இருக்கும். இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை என அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் மட்டுமே குறியாக கொண்டு வருகிறாராம். தான் நடித்த படங்கள் வெளியாகிறதா? ஓடுகிறதா என்பதை பற்றி எந்தவொரு கவலையும் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்வதில்லையாம்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

AIA

Wed Sep 1 , 2021
மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனங்களின் விருது அமைப்பாளர்கள் – சார்ட்டர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட்ஸ் (சிஐஎம்ஏ) மற்றும் சர்வதேச வர்த்தக சபை Source link

You May Like

Breaking News

Translate »