பிரம்மாண்ட நெட்ஃப்ளிக்ஸ் தொடரை இயக்கும் சஞ்சய் லீலா பன்சாலி | Sanjay Leela Bhansali Heeramandi


நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் ஒரு பிரம்மாண்ட வெப் சீரிஸை இயக்க சஞ்சய் லீலா பன்சாலி ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆலியா பட் நடிப்பில் ‘கங்குபாய் கதியாவாதி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி. இப்படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கியப் பணிகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் ஓடிடியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘கங்குபாய் கதியாவாதி’ வெளியீட்டுக்கு முன்பே தனது அடுத்த படைப்புக்குத் தயாராகிவிட்டார் பன்சாலி. தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் ஒரு பிரம்மாண்ட வெப் சீரிஸை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்தொடருக்கு ‘ஹீராமந்தி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ‘ஹீராமந்தி’ என்பது சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் பாகிஸ்தானின் லாகூருக்கு அருகில் இருந்த ஒரு பகுதியாகும். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைப் பின்னணியில் இத்தொடர் அமையவுள்ளது.

இதுகுறித்து சஞ்சய் லீலா பன்சாலி கூறும்போது, ”இது ஒரு பிரம்மாண்டத் தொடர். எனவே, இதை இயக்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘ஹீராமந்தி’யை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டுசெல்ல எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்தியாவில் 10 வயதுக்குள்ளாகவே புகையிலை பயன்படுத்தத் தொடங்கும் சிறுவர்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் | Over a quarter of students exposed to second-hand smoke: survey

Wed Aug 11 , 2021
இந்தியாவில் உள்ள சிறுவர்கள் 10 வயதுக்குள்ளாகவே புகையிலையை ஏதாவது ஒரு வடிவத்தில் அதாவது சிகரெட், பீடி, புகையிலை எனப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் என்று சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 13 முதல் 15 வயதுள்ள பள்ளி செல்லும் சிறுவர்களிடையே புகையிலைப் பயன்பாடு குறித்து […]

You May Like

Breaking News

Translate »